மிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து செந்தமிழில் பேசவும், எழுதவும் திறன் பெற்ற குமாரி சாய் சஞ்சனா சீரடி சாய்பாபாவின் தீவிர பக்தை. தனது தாய்- தந்தையுடன் அமெரிக்காவில் வசித்துவரும் சாய் சஞ்சனா தற்போதுஅமெரிக்கா நியூ ஜெர்சி கல்லூரியில் பயின்றுவருகிறார்.

Advertisment

சீரடி சாய்பாபாவின் தீவிர பக்தையான அவரைச் சந்தித்து அவரின் இறைவழிபாடுகள் பற்றி உரையாடினோம்.

Advertisment

தனது தெய்வ வழிபாடுகள் மற்றும் இறை நம்பிக்கைகள் பற்றி நம்மிடம் விரிவாகக் கூறினார்.

நான் சிறு வயதிலிருந்தே இறை நம்பிக்கையுடன் வளர்ந்தவள். ஒவ்வொரு நாளும் காலை எழுந்து குளித்தவுடன் எங்கள் குலதெய்வமான மயிலம் முருகரையும், என் இஷ்ட தெய்வமான சீரடி சாய்பாபாவையும் வணங்கி அன்றைய நாளை தொடங்குவது எனது வழக்கம். தினமும் நெற்றியில் பாபாவின் விபூதியை இட்டுக்கொள்வது என் பழக்கம். எனது புத்தகப் பையில் சாய்பாபாவின் படம் எப்போதும் இருக்கும். 

Advertisment

உங்களின் தினசரி பூஜை முறை எப்படி?

குலதெய்வத்திற்கும், இஷ்ட தெய்வங் களுக்கும் நமஸ்காரம் செய்வேன். ஹனுமன் சாலிஸா, மஹிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம் கேட்பது எனக்கு மிகவும் பிடிக்கும். "எல்லோருக்கும் நலம் அருள்க' என்பதே எனது பிரார்த்தனை.

நீங்கள் சென்ற சிறப்புவாய்ந்த கோவில்கள்...

எனது தாய்- தந்தையுடன் சேர்ந்து பல கோவில்களுக்கு சென்றிருக்கிறேன்.

எங்கள் குலதெய்வமான மயிலம் முருகன் கோவில் தொடங்கி தமிழகத்தின் மிகவும் பிரசித்திபெற்ற ஆலயங்களுக்கு சென்று வந்திருக்கிறோம். குறிப்பாக...

. சீரடி சாய்பாபா கோவில் 

. மதுரை மீனாட்சியம்மன் கோவில்

. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில்

. திருச்சி உச்சிப் பிள்ளையார் கோவில் 

. திருவானைக்காவல்

. சமயபுரம் மாரியம் மன் கோவில்

. தஞ்சை பிரகதீஸ் வரர் கோவில்

. பழமுதிர்சோலை

. பழனி 

. சுவாமிமலை

. திருத்தணி 

என இன்னும் ஏராளமான ஆலயங் களுக்கு சென்று வந்திருக்கிறேன்.

signer1

மும்பை, கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்திலுள்ள கோவில்களுக்கும் சென்னையிலுள்ள பிரசித்திபெற்ற கோவில்கள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் வெளிநாடு களிலுள்ள முக்கிய ஆலயங்களுக்கும் சென்று வந்திருக்கிறேன்.

இந்தக் கோவில்களில் கிடைத்த தெய்வீக ஆற்றலை நான் உணர்ந்திருக்கிறேன். 

படிக்கும் மாணவி நீங்கள்... 

தேர்வு பயம் உங்களிடம் உண்டா?

சில முக்கியத் தேர்வுகளை எதிர்கொள்ள பயம் இருக்கும். அப்போது மனம் நிறைய பிரார்த்தனைகள் செய்வேன். அதன்பிறகு மனதில் அமைதிவந்து, தானாக தைரியம் வரும். அதை இறையருளாக நம்புகிறேன்.

போட்டிகளில் பங்கெடுத்திருக்கிறீர்களா?

பாட்டு, பேச்சு, எழுத்து, நாடகம் என பலதரப்பட்ட போட்டிகளில் பங்கேற்று பல விருதுகள் பெற்றுள்ளேன். எந்த மேடையில் நிற்கும்போதும் மனதில் "முருகரையும், சாய்பாபாவையும், அனுமனையும் மனதில் நினைத்துக்கொள்வேன். தெய்வத்தை நினைத்தால் தன்னம்பிக்கை தன்னால் வரும்.

சென்னையில் படிக்கும்போது Wordsworth Spelling Bee எனப்படும் ஆங்கில வார்த்தைகளின் ஸ்பெல்லிங் போட்டியில் மாநில அளவிலும், தேசிய அளவிலும் முதலிடம் பிடித்தேன். இந்தப் போட்டியில் கலந்துகொண்ட 5,000 மாணவர்களில் நான் முதலிடம் பெற்றது மறக்க முடியாத அனுபவம். 

குழந்தைகளுக் காக இதுவரை மூன்று தமிழ்ப் புத்தகங்களை எழுதியிருக்கிறேன். "நிலவில் நான்', "வணக்கம் தமிழகம்' மற்றும் "கொரோனாவை வென்ற க்ரோஷே' என்ற மூன்று புத்தகங் களும், முறையே 2015, 2018 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவின் ஐபாட்டி நிறுவனத்தால் வெளியிடப்பட்டன. நான் எழுதிய புத்தகங்களுக்காக "இளம் எழுத் தாளர்' விருதை மூன்றுமுறை பெற்றிருக் கிறேன். 2022-ஆம் ஆண்டு நியூஜெர்சி மாநிலத்தின் தமிழ் இருமொழி முத்திரைத் தேர்வில் தேர்ச்சிபெற்றேன். நியூ ஜெர்சி தமிழ்ச்சங்கம் வழங்கிய "தாய்த் தமிழ் விருது' பெற்றேன். 

திருக்குறள் முற்றோதல்கள், பேச்சுப் போட்டிகள், பட்டிமன்றங்கள், கலை நிகழ்ச்சிகள் எனத் தமிழ் சார்ந்த நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கேற்று பல பரிசுகளைப் பெற்று. 2016-ல் வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை நிகழ்வில் "தங்க ராணி' என்ற நாடகத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துப் பலரது பாராட்டு களையும் பெற்றேன். கடந்த ஆண்டு தூர்தர்ஷன் தமிழ் தொலைக்காட்சியில் சுதந்திர தின சிறப்புப் பட்டிமன்றத்திலும், மங்கையர் சோலை நிகழ்ச்சியிலும் பங்கேற்றுப் பேசியது மறக்கமுடியாத அனுபவம் என்ற சஞ்சனாவின் விருதுப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

எதிர்கால திட்டங்களாக என்ன வைத்திருக்கிறீர்கள்?

கடினமுயற்சி, உழைப்பு, இறைநம்பிக்கை ஆகிய மூன்றையும் வழிகாட்டியாக வைத்து எனது எதிர்கால வாழ்க்கையைத் தொடர விரும்புகிறேன். தெய்வ அருளும் பெற்றோ ரின் ஆசீர்வாதமும் அதற்கு உறுதுணையாக இருக்கும் என நம்புகிறேன்.

உங்கள் இசைப் பயணம் பற்றி சொல்லுங்கள்...

எனது இசைப் பயணம் நான்கு வயதிலிருந்து தொடங்கியது. நான் முறையாக கர்நாடக சங்கீதம் கற்றுக் கொண்டேன். அமெரிக்காவில், மேற்கத்தியப் பாடல்களில் பயிற்சிபெற்று, மத்திய ஜெர்சி இசைக் குழுவில் பாட என்னுடைய 15-ஆவது வயதிலும், 17-ஆவது வயதிலும் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
தமிழ் இசையில், 2019-ல் நியூஜெர்சி தமிழ்ப் பேரவை நடத்திய "சூப்பர் சிங்கர்' போட்டியில் முதலிடம் பெற்று "பேரவைப் பாடகர்' என்ற விருதைப் பெற்றேன். வடஅமெரிக்கத் தமிழ்ப் பேரவை தேசிய அளவில் நடத்திய பாடல் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

பிரின்ஸ்டன் பெண்கள் இசைக்குழு, மேரிலாந்து பல்கலைக்கழக இசைக்குழு மற்றும் "ஜ்வாலா' என்ற நியூஜெர்சி இசைக் குழுவில் பாடகராக பல நிகழ்ச்சி களில் பாடிய அனுபவம் உண்டு.

இசைமூலம் சமூக சேவையையும் மேற்கொண்டுள்ளேன். சமீபத்தில் நான் பாடிய தமிழ் பக்திப் பாடல்கள் "கிரி பக்தி' என்ற யூடியூப் சேனலிலும், ஜோதி டிவியிலும் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. 

என் பார்வையில், இசை ஒரு கலைவடிவமாக மட்டுமல்ல; அது சமூகங்களை இணைக்கும் பாலமாகவும், தமிழர் மரபு, மொழி, பண்பாட்டை வாழவைக்கும் ஊடகமாகவும், மனங்களை நெகிழ வைக்கும் தாக்கத்துடன் அனைவரையும் ஊக்குவிக்கும் ஒரு ஆழமான சக்தியாகவும் இருப்பதாக நம்புகிறேன்.

அமெரிக்காவில் தமிழர் பெருமையை நிலைநாட்டி வரும் இளம் சாதனைப் பெண் சாய் சஞ்சனாவின் சாதனைகள் தொடரவும், அவரது லட்சியங்கள் நிறைவேறவும் மனமார வாழ்த்தி விடைபெற்றோம்.         

சந்திப்பு: விஜயா கண்ணன்